“என் பாதை சரியானதுதானா?” 6 TIPS FOR SELF-IMPROVEMENT

“என் பாதை சரியானதுதானா?”

உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய சுய முன்னேற்றத்திற்கான 6 கேள்விகள்

6 TIPS FOR SELF-IMPROVEMENT

===================================================================

என் வாழ்க்கை பயணத்தை பார்க்கும்பொழுது, ஓரளவுக்கு மனநிறைவு ஏற்படுகிறது. ஆனாலும், சில நேரங்களில், ஒரு முழுமையற்ற, வெறுமையான மனநிலையும் ஏற்படுகிறது. இன்னும் ஏதோ ஆழமாக, அர்த்தமுள்ள ஒன்றை மனம் தேடுகிறது.

வாழ்க்கையில் நாம் எத்தனையோ பிரச்சனைகளுடன் தான் வாழ்கிறோம். இருந்தும் இவை எல்லாம் கடந்து, நம்முடைய வாழ்க்கையின் நோக்கத்தை, இருப்பின் அவசியத்தை நாம் கண்டுணர வேண்டும். குழந்தை பருவத்தில் நமக்கே உண்டான ஆசைகள் யாவும் இன்னும் நமக்குள்ளே உயிர்ப்புடன் இருக்க வேண்டும். அவை நனவாகும் என்று நாம் உறுதியாக நம்ப வேண்டும்.

https://www.youtube.com/watch?v=CwAJ8xLd5vY&t=2s

Self-Improvement, Motivation, TamilYoutube, Kuviam

  1. உண்மையில் எனக்கு என்ன வேண்டும்?

ஆண்டாண்டுகாலமாக மனிதன் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வி. எத்தனையோ விஷயங்கள் செய்ய நினைக்கிறோம்; ஆனால், தினப்படி நாளை கடப்பதற்கே நேரம் போதவில்லை !

உங்கள் தனித்திறன் என்ன, நீங்கள் சிறப்பாக செய்யக்கூடியது என்ன என்று கண்டுபிடியுங்கள் ! உங்கள் சுய முன்னேற்றத்திற்கான ஒரு சிறிய படியாக அது அமையலாம். விடாமுயற்சி அதன் முக்கியத்துவத்தை உங்களுக்கு உணர்த்தும்.

  1. நான் உண்மையில் மாறத்தான் வேண்டுமா?

மனிதனின் சரித்திரம் சொல்லும் ஒரு பேருண்மை என்னவென்றால், “மாற்றம் இன்றியமையாதது.” நாம் வாழும் பரபரப்பான வாழ்க்கை இயக்கத்தில் நம் உள்ளிருக்கும்

ஒளியை நாம் காண்பதில்லை. அதற்கு ஒரு சிறு முயற்சி கூட எடுப்பதில்லை. நம் தனித்துவமான, உண்மையான சுயத்தை தெரிந்துகொள்வது அத்தனை கடினமான செயல் இல்லை. இல்லை என்றால் நாம் எல்லோருமே, ஒருவிதமான செயல்களைத்தானே செய்துகொண்டிருப்போம்? ஒரேவிதமான வாழ்க்கையை தானே வாழ்ந்துகொண்டிருப்போம்? நம் வாழ்வில் பல சுவாரஸ்யிமான, உற்சாகமான நிகழ்வுகள் ஏற்பட வேண்டுமென்றால், மாற்றம் இன்றியமையாதது.

  1. இன்று என்னிடம் இருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேனா?

Self-Improvement, Kuviam, YoutubeTamil,

நீங்கள் செய்ய நினைத்ததை எல்லாம் செய்து விட்டீர்களா? நீங்கள் செய்ய தவறிய சின்னச்சின்ன விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். உடை, சிகை அலங்காரம்; அரைமணி நேர நடைப்பயிற்சி ; உங்கள் car driver உடன் பழகும் முறை; அடுத்தவரிடம் பேசும் தன்மை; இவற்றில் ஏதாவது ஒன்றில் மட்டு

ம் உங்கள் கவனத்தை செலுத்திப்பாருங்கள்.

  1. என்னிடம் எவ்வளவு இருக்க வேண்டும்?

இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்று எந்த வரைமுறையும் கிடையாது. ஆனால், உங்களுக்கு அது எந்த அளவுக்கு முக்கியமாக தேவைப்படுகிறது என்பதுதான் முக்கியம். மிகுந்த செல்வம் வேண்டும், பணம் வேண்டும் என்பது உங்கள் ஆசையாக இருக்கலாம். ஆனால், அதற்கான தன்முனைப்புகளில் நீங்கள் எந்த அளவுக்கு ஈடுபட தயார்? அதற்காக எதை எல்லாம் விட்டுக்கொடுக்க தயார்?

  1. என்னை உத்வேகப்படுத்துவது எது?

இதற்கு நீங்கள் தான் விடை தேட வேண்டும். மகிழ்ச்சியாக இருக்க பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால், அதில் முதன்மையாக ஒன்றை தேர்ந்தெடுப்பது சற்று கடினம். இருந்தும், ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு முயற்சி செய்து பாருங்கள்.

Self-Improvement, Motivation, TamilYoutube, Kuviam, Eegai

  1. என் பாதை சரியானதுதானா?

உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு  செய்யவேண்டியது நீங்கள்தான். ஆனால், ஒன்றை தொடங்கும் முன்பே, அதை அடைவது கடினம் என்று நினைத்துவிட்டால், இருட்டில் தொலைத்ததை வெளிச்சத்தில் தேடுவதற்கு சமமாகும்.

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் !

சுயமுன்னேற்றம் என்பது நம் உடலிலும், மனதிலும் நிகழும் மாற்றம் மட்டுமல்ல; நமக்கு என்ன தேவை என்பதை தெளிவாக புரிந்து கொண்டு, அதை நம் ஆழ்மனதில் உறுதியாக பதியவைப்பதுதான் !

 

வாழ்க வையகம் !

வாழ்க வளமுடன் !

[simple-author-box]

 

நல்ல விஷயங்களை பகிர்ந்து உதவுங்கள்!

Picture of Editorial Team

Editorial Team

Top Posts

புத்தக புதையல்

உங்கள் தர்மத்தில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா? – “போதியின் நிழல்” உணர்த்தும் வாழ்க்கைப் பாடம்

வாழ்க்கையில் தாம் எடுத்த காரியத்தை செவ்வனே முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் ஆயிரத்தில் ஒருவராகவே இருப்பர். அதிலும் அந்த காரியம் பெரியதாக ...
Read More →

நிறைவான வாழ்க்கையை உறுதி செய்யும் டாக்டர் வேய்ன் டயரின் 7 புத்தகங்கள்

வாழ்க்கையின் எந்தவொரு பிரச்சினைக்கும் ஒரு ஆன்மீக தீர்வு உண்டு என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா? ஆன்மீகம் என்றாலே பயந்து பின்வாங்குபவர்களுக்கு ...
Read More →

வாழ்க்கையின் ஒரு அரிய உண்மையை விளக்கும் ‘மூங்கிலின் கதை’

“என்னப்பா வாழ்க்கை எப்படி போகிறது” என்ற கேள்விக்கு எப்போதுமே நம் பல பேரிடம் இருக்கும் பதில், “அது எங்கேப்பா.. அப்படியே ...
Read More →

எனது கதை

வாழ்க்கையில் லட்சியத்துடன் இரு, வெற்றியை நோக்கி ஓடு என்ற அறிவுரைகளை கேட்டு வளர்பவர்கள் தான் நாம். சமூகம் சொல்லும் விதிகளை, ...
Read More →

உன் கையில்தான் மகனே…

ஒரு சிறுவன் தன் தாயிடம் சென்று “அம்மா யாரம்மா அந்த முதியவர், அந்த மலை மேல் உட்கார்ந்து கொண்டு தவம் ...
Read More →

பொன்விதி தெரியுமா உங்களுக்கு?

உலகில் எல்லாவற்றிலும் எல்லாவர்க்கும் நன்மை பயக்க எல்லா மதங்களும் பின்வரும் ஒரு விஷயத்தை போதிக்கின்றன. இதனை நாம் “பொன் விதி” ...
Read More →

பயனுள்ள பிற பதிவுகள்

பயத்தை அறியவும் அதனை போக்கவும் உளவியல் ரீதியான 5 படிகள்

நம் எல்லோரையும் அச்சுறுத்தும் ஒரே விஷயம் “பயம்” மற்றும் அதனால் நம் வாழ்வில் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் தான். பயம் ஏன் ஏற்படுகிறது, ஒருவரது வாழ்க்கையில் அதன் பாதிப்புகள் எவ்வளவு தூரம் வரை செல்லும், ...
Read More →

புதிய வருடத்தின் இலக்குகள் – ஒரு திட்டமிடல் தாள் – Goal Setting/Action Worksheet – Tamil Motivation

50000+ subscribers தாண்டி நமது சானல் ஓடிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் எமது வீடியோக்களுக்கு ஆதரவு அளிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். இந்த நன்றியுரைத்தலின் ஒரு வெளிப்பாடாகவும் இந்த புதிய வருடத்தை வரவேற்கும் விதமாகவும் இந்த ...
Read More →

TIPS TO CREATE A PROPER GOAL STATEMENT – ஒரு முறையான இலக்கு அறிக்கை உங்கள் சாதனையை முடிவு செய்யும்

TIPS TO CREATE A PROPER GOAL STATEMENT ஒரு முறையான இலக்கு அறிக்கை உங்கள் சாதனையை முடிவு செய்யும் இந்த உலகத்தில் நம்மை நம் சாதனைகள் மூலம் தான் அளவிடுகிறார்கள். ஆனால், பெரும்பாலான ...
Read More →

வாழ்க்கையின் ஒரு அரிய உண்மையை விளக்கும் ‘மூங்கிலின் கதை’

“என்னப்பா வாழ்க்கை எப்படி போகிறது” என்ற கேள்விக்கு எப்போதுமே நம் பல பேரிடம் இருக்கும் பதில், “அது எங்கேப்பா.. அப்படியே தான் போய்க் கொண்டிருக்கிறது” என்பதுதான். நாம் எல்லோரும் நம் வாழ்வில் “வளர்ச்சி” என்று ...
Read More →

அதிகாலைப் பொழுதை வென்றுவிட்டால், அகிலத்தை ஆண்டு விடலாம்

“அதிகாலைப் பொழுதை வென்றுவிட்டால், அகிலத்தை ஆண்டு விடலாம்,” என்பது அறிஞர்கள் வாக்கு. தூக்கம் என்று வரும் போதே எல்லோருக்கும் இத்தனை மணிநேரம் தூங்க வேண்டும் என்று ஒரு கணக்கு இருக்கும். ஒருவர் எட்டு மணிநேரமாவது ...
Read More →

உங்கள் சுயப்பிரகடனங்களை சரியாக எழுத 5 படிகள்

நாம் அனுதினமும் பல எதிர்மறை விஷயங்களை சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். அது நம் எண்ணங்களில் பலவிதமாக பிரதிபலித்துக் கொண்டே இருக்கிறது. எப்போது எதிர்மறைகள் நமது சிந்தனைக்குள் நுழைகிறதோ அப்போதே நாம் மூட்-ஆஃப் ஆகி விடுகிறோம். ...
Read More →

மனம் விரும்பியதை நிகழ்த்திக் காட்டுங்கள் புத்தகத்தை வாங்கி பயன்பெறுங்கள்!!

Scroll to Top