Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest

நிறைவான வாழ்க்கையை உறுதி செய்யும் டாக்டர் வேய்ன் டயரின் 7 புத்தகங்கள்

வாழ்க்கையின் எந்தவொரு பிரச்சினைக்கும் ஒரு ஆன்மீக தீர்வு உண்டு என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா? ஆன்மீகம் என்றாலே பயந்து பின்வாங்குபவர்களுக்கு இது சரியானது அல்ல என்று தோன்றும். ஆன்மீகம் என்றாலே மதம் சம்மந்தப்பட்டது என்று சொல்பவர்களுக்கும் இது பொருந்தாது. உண்மையில் ஆன்மீகம் என்பது ஆன்மாவை அறிவது (Spirituality is all about spirit and it is not religion). Being Religious is different and Being spiritual is entirely different என்பார்கள். மத ரீதியான சிந்தனை என்பது ஒவ்வொருவரது மதம் என்ன சொல்கிறதோ அதனை குருட்டாம்போக்கில் அப்படியே பின்பற்றுவது. பகவத் கீதையே என்றாலும், பைபிள் குரான் என்றாலும் உள்ளே என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று அகத்தில் சென்று ஆராயும் போது ஆன்மாவின் இயல்பு புலப்படுகிறது. அதுதான் ஆன்மீகம். ஒவ்வொரு வாழ்வியல் பிரச்சினைக்கும் ஆன்மீக ரீதியான அணுகுமுறையில் தீர்வு உண்டு என்பது எந்த அளவில் உண்மையாக இருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறதா உங்களுக்கு. இந்த அகம், அற்புதம் இணைய தளம் முழுவதும் அதுதான் பரவி கிடக்கிறது. எல்லாவற்றிலும் ஆன்மீக அணுகுமுறைதான் கையாளப்பட்டிருக்கிறது. ஆனால் எந்தவொரு அணுகுமுறையும் இந்த குறிப்பிட்ட மதத்தை சார்ந்தது என்று சுட்டிக் காட்ட முடியாது. 

“தாயின் கருவறைக்குள் இருக்கும் ஒன்பது மாதங்கள் வரை நமக்கு வேண்டியது எல்லாம் தாய்க்கு கூட எப்படி என்று தெரியாமல் கிடைக்கிறது.  ஆனால் தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்தவுடன் “இனி நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்வது ஏந்த விதத்தில் நியாயம்?” என்று டாக்டர் வேய் டையர் தனது புத்தகங்களில் சுட்டிக் காட்டியதை வாசித்த போது எனக்கு தலையில் சம்மட்டியால் அடித்தது போல இருந்தது. 

உண்மைதான் அல்லவா? தாய் வயிற்றில் இருக்கின்ற போது நமக்கு வேண்டிய ஊட்டச்சத்திலிருந்து நுண்மான் மனதின் உருவாக்கம் வரை உள்ளே எப்படி நடக்கிறது என்பது தாய்க்கு கூட தெரியாது. ஆனால் அனைத்தும் இறை ஆற்றலால் சீராக கவனித்துக் கொள்ளப்படுகிறது. அது வரை அந்த கருவிற்கு பெயர் கூட கிடையாது. ஆனால் வெளியே வந்தவுடன் முதலில் அதற்கு பெயர் வைக்கப்படுகிறது. பின்னர் ஒவ்வொன்றாக பொய்யானதொரு சுயம் உருவாக்கப்படுகிறது. அதுவரை தன்னை வழிநடத்திய இறைபேராற்றலுக்கு பை பை சொல்லி வழியனுப்பி வைத்துவிடுகிறோம் அல்லவா. இதைத்தான் EGO (Edge God Out) என்று சொல்கிறோம். ஆண் பெண் இணைப்பில், விந்து நாத கலப்பில் ஒரு வேதியியல் கலப்பாக இருக்கும் ஒரு பொருள் எப்படி உயிர் பெறுகிறது, எப்போது உயிர் பெறுகிறது? இந்த உயிர் என்பது உண்மையில் என்ன? இதையல்லவா “ஆன்மா” என்கின்றன அனைத்து மதங்களும். கருமுட்டையானது ஒன்பது பத்து மாத கால அவகாசத்தில் கை கால்கள் முளைத்து, மூளை உருவாகி அப்பப்பா நினைத்து பார்க்கவே ஒரு அற்புதமான வடிவமைப்புதான் அல்லவா? இதை செய்ய முடிந்த இறைஆற்றலால் உங்கள் வாழ்க்கை பிரச்சினைகளுக்கு தீர்வு உணர்த்த முடியாதா? நீங்கள் தான் யோசித்து பார்க்க வேண்டும்.

உண்மையில் டாக்டர் வேய்ன் டையரின் “There is a Spiritual Solution for Every Problem”  என்ற காணொளியின் அடிப்படையில் தான் மேற்கண்டவை யாவையும் நான் எழுதியிருக்கிறேன். உலகமே பிரச்சினைக்குரியதாக தோன்றுகிறதா, அழுக்கு உலகத்தில் இல்லை நீங்கள் உலகத்தை பார்க்கும் விதத்தில் தான் என்கிறார் அவர். தீர்வுகள் எல்லாம் எங்கேயோ புறத்தில் இல்லை. உங்களுடன் எப்போதும் ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கும் அந்த மூலப் பரம்பொருளிடம் தான் உள்ளது அதற்கு நீங்கள் உங்கள் அகத்தில் சென்று அதனை உணர வேண்டும் என்கிறார் அவர்.

அவரின் புத்தகங்கள் என் வாழ்க்கையை புரட்டிப் போட்டது என்று சொல்வது போதாது. உங்கள் வாழ்க்கையில் தீரவே தீராது என்று நீங்கள் நினைக்கும் பிரச்சினைகள் இருக்கின்றனவா. கீழே நான் கண்டு வாசித்து அனுபவித்து பலன் கண்ட டாக்டர் வேய்ன் டையரின் ஐந்து புத்தகங்களை பட்டியலிட்டிருக்கிறேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

1. The Shift

எல்லோரையும் போல ஈர்ப்பு விதியை கண்டு வாய் பிளந்திருந்த என்னை பிரபஞ்சத்தின் யதார்த்தத்தையும் லட்சிய வாழ்க்கையிலிருந்து அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ வேண்டியதின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்த புத்தகம். லட்சியத்திலிருந்து அர்த்தமுள்ள வாழ்க்கை என்று சொன்னவுடன் நிறைய பேர் ஓட்டம் பிடிப்பதை பார்த்துள்ளேன். “இருந்தோமா சம்பாதிச்சோமா வாழ்ந்தோமா செத்தோமானு இருக்கணும்” என்று சொல்வார்கள் பலர். இவர்கள் அனைவரும் மேலே முன்னுரையில் கூறியது போல ஈகோவினால் ஆட்கொள்ளப்பட்டிருப்பார்கள். இவர்களுக்கு பிரச்சினை என்று வரும் போது கண்டிப்பாக இந்த அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்பவர்களால்தான் உதவி நேரும். இந்த புத்தகத்தில் ஈகோவின் பிடியில் இருக்கும் போது மனிதனுக்கு நேரும் இன்னல்களும் அதுவே இறையின் பிடியில் ஆகும் போது நிகழும் அற்புதங்களும் என்னென்ன என்பதை தமது வாழ்க்கையின் அனுபவங்களோடு இணைந்து பகிர்ந்திருப்பார் டாக்டர் வேய்ன் டையர். நிறைவான வாழ்க்கை வாழ விரும்பும் அனைவரும் நிச்சயம் படித்திருக்க வேண்டிய, கையில் என்றென்றும் வைத்திருக்க வேண்டிய புத்தகம். இந்த புத்தகம் தமிழில் இல்லை. 

இந்த புத்தகத்தின் அடுத்த கட்டமாக ஒரு டெலிபிலிம் வெளியானது. டாக்டர் வெய்ன் டையர் எங்கு சென்றாலும் இந்த படத்தின் சிடிக்களை கையோடு சில பிரதிகள் எடுத்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். தாம் சந்திக்கும் அனைவரிடமும் அந்த சிடிக்களை கொடுத்து அதனை பார்க்க சொல்லுவாராம். இந்த படத்திற்காக நான் தமிழில் சப்டைட்டில் உருவாக்கியுள்ளேன். புத்தகம் வேண்டுவோர் கீழுள்ள லின்க்கில் அமேசானில் வாங்கிக் கொள்ளலாம். ஷிஃப்ட் படத்தின் சப்டைட்டிலும் கீழே கொடுத்துள்ளேன். வேண்டுவோர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். 

2. The Power of Intention

தமிழில் ‘விருப்பத்தின் சக்தி’ என்று கண்ணதாசன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. நம்மோடு சேர்த்து நாம் காணும் காட்சிப் பொருள்களுக்கெல்லாம் காரணமான மூலப்பரம்பொருள் எப்படி எல்லாவற்றையும் அற்புதமாக வழிநடத்திக் கொண்டிருக்கிறது என்றும், அது எப்படிப் பட்ட ஒரு அற்புத பேரறிவு என்பதையும் அதனால் முடியாதது எதுவும் இல்லை என்றும், நம் விருப்பம் அந்த தெய்வீக விருப்பத்தோடும் ஒன்றிணையும் தருணத்தில் அது நிறைவேறுவதில் எந்த ஒரு சிக்கலும் இருப்பதில்லை என்பதை மிக அழகாக சொல்லியிருக்கும் ஒரு நூல். தெய்வீகத்தின் துணைக் கொண்டு வாழ்வில் அத்தனை வளங்களையும் பெறலாம் என்பதை தெள்ளத்தெளிவாக விளக்கும் புத்தகம்.

3. Inspiration – Your Ultimate Calling

இந்த உலகத்தில் உள்ள அத்தனை பொருள்களும் ஏதோ ஒரு காரணத்தால்தான் படைக்கபட்டிருக்கின்றன என்றும், அதே போல தான் மனிதர்களான நாமும், நம் பிறப்பிற்கும் நம் தனித்துவத்திற்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது, நமது பிறப்பிற்கு ஏதோ ஒரு அழைப்பு இருக்கிறது என்பதையும் அழகாக விளக்கும் புத்தகம் இது. வாழ்க்கையை ஏனோ தானோ என்று தான்தோன்றித் தனமாக வாழாமல் அகத்திலிருந்து புறமான தனது அழைப்பை முழுமையாக உணர்ந்து ஏற்று வாழும் போது வாழ்க்கையில் என்னெவெல்லாம் அற்புத மாற்றங்கள் நிகழும் என்றும், தீமைகள் எதுவும் எப்படி அண்டவே அண்டாது என்றும் இந்த புத்தகத்தில் எழுதியிருப்பார் வேய்ன் டையர். தமிழில் “உள்மைய எழுச்சி” என்று கண்ணதாசன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

புத்தகத்தை இந்த அமேசான் லின்க்கில் இருந்தும் வாங்கிக் கொள்ளலாம்

4. Excuses Begone

எதற்காவது எப்போது பார்த்தாலும் எதையாவது குறை கூறுவதையே நாம் வழக்கமாக கொண்டுள்ளோம். ஆனால் அந்த எல்லைகளை எல்லாம் தகர்த்தெறிய உதவும் புத்தகம் இந்த புத்தகம். நாம் உண்மையிலேயெ எல்லையற்றவர்கள் நமது சாக்குபோக்குகளெல்லாம் சும்மாதான், அதனை அறிந்து கடந்து விட்டால் இந்த உலகத்தில் எதுவானாலும் சாத்தியம் என்று சொல்கிறது இந்த புத்தகம்.

5. Wishes Fulfilled.

பைபிளின் மிகப்பெரிய ரகசியம் ஒன்று கண்டறியப்பட்டது. அது I AM எனும் வார்த்தைகளின் சக்தி. இந்த வார்த்தைகள் தான் படைப்பவனின் ஸ்வரம் என்று கண்டறியப்பட்டது. இந்த வார்த்தைகளோடு சேர்ந்து எதைச் சொன்னாலும் அதுவாகவே நாம் ஆவோம் என்று பல கட்ட ஆராய்ச்சிகளுக்கு பின் அறியப்பட்டது. நம் இந்தியாவில் சொல்லும் 4 மகா வேத வாக்கியங்களும் இதே கருத்தைதான் சொல்கின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த புத்தகத்தில் இந்த வார்த்தைகளின் சக்தியும், அந்த மூலப்பரம்பொருளோடு ஒரு இணைப்படைப்பாளியாக எப்படி வேண்டுவன படைக்கமுடியும் என்பதையும் அதற்கு இந்த I Am சுயப்பிரகடனங்கள் எப்படி உதவுகின்றன என்றும் எழுதியுள்ளார் வேய்ன் டையர்.

6. Change Your Thoughts Change Your Reality

இந்த உலக வாழ்க்கையின் உண்மை இயல்பை தாவோ-தே-சிங் மூலமாக சீன பெரும்ஞானி லாவோட்சு எடுத்து சொல்வது போல யாராலும் எடுத்து சொல்ல முடியாது. உலகின் நன்மை தீமையை சரி சமமாக பார்க்க வேண்டும் என்றும், எதிர்மறைகளின் முக்கியத்துவம் குறித்தும், இன்னபிற வாழ்க்கையின் தத்துவங்களை லாவோட்சு 6ம் நூற்றாண்டில் தனது 81 தனிப்பாடல்கள் மூலமாக தெரிவித்ததை இன்றைய சூழ்நிலைக்கு பொருந்துமாறு பொருள்படுத்தி எழுதிய புத்தகம் தான் இது. 81 பாடல்களுக்கும் தனக்கே உரிய ஸ்டைலில் விளக்கவுரை எழுதி எப்படி இந்த பிரபஞ்ச வடிவமைப்பு நமது ஒவ்வொருவர் வாழ்விலும் யதார்த்தமாக ஒரு மனநிறைவை தருகிறது என்று இந்த புத்தகத்தில் தந்திருக்கிறார் வேய்ன் டையர்.

இந்த புத்தகம் தமிழில் இல்லை. ஆனால் குறிப்பிட்ட தாவோ-தே-சிங் பாடல்களை தமிழில் விளக்கங்களுடன் சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் “சீன ஞானக் கதைகள்” என்று வெளியிட்டுள்ளது.

7. You’ll See it When You Believe it

இந்த புத்தகம் டாக்டர் வேய்ன் டையர் எழுதிய முதல் சில புத்தகங்களுள் ஒன்றாகும். இதன் முதல் பதிப்பு 1989ல் வெளிவந்திருக்கிறது. ஈர்ப்பு விதி, பிரபஞ்ச விதிகள் போன்ற விஷயங்கள் பல நூற்றாண்டுகளாய் மனித நாகரீகத்தை ஆண்டு வந்திருக்கின்றன என்பதை கருத்தில் கொள்ளும் போது இந்த 30 வருடங்கள் குறைவுதான். மனதின் ஆற்றலும், எண்ணத்தின் போக்குகளும் நாம் கொள்ளும் நம்பிக்கைகளும் எப்படி நம் வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் பெற்றுத் தருகின்றன என்பதை இந்த புத்தகத்தில் மிக அழகாக சொல்லியிருக்கிறார் டாக்டர் வேய்ன் டையர். இந்த உலகத்தில் எதையும் புதியதாக படைக்க வேண்டாம், எல்லாம் ஏற்கனவே அரூபமாக இருக்கின்றன, நீ செய்ய வேண்டியதெல்லாம், நீ விரும்பியது நிறைவேறிக் கொண்டிருக்கிறது என்று நம்ப வேண்டும். அந்த நம்பிக்கையே அந்த அரூபத்திலிருந்து நீ காணும் ரூபப் பொருளாக அதனை மாற்றிக் கொடுக்கும்,” என்பதுதான் இந்த புத்தகத்தின் மையக் கருத்து.  

நல்ல விஷயங்களை பகிர்ந்து உதவுங்கள்!

Vinoth Rajesh

Vinoth Rajesh

Founder of Alpha at Omega Foundation for Human Excellence and its media wing Agam, Arputham. Highly Committed to the Service of Humanity. Also wearing multiple hats as: An Author, Independent Film Maker and Social activist.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Top Posts

புத்தக புதையல்

உங்கள் தர்மத்தில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா? – “போதியின் நிழல்” உணர்த்தும் வாழ்க்கைப் பாடம்

வாழ்க்கையில் தாம் எடுத்த காரியத்தை செவ்வனே முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் ஆயிரத்தில் ஒருவராகவே இருப்பர். அதிலும் அந்த காரியம் பெரியதாக …

Read More →

நிறைவான வாழ்க்கையை உறுதி செய்யும் டாக்டர் வேய்ன் டயரின் 7 புத்தகங்கள்

வாழ்க்கையின் எந்தவொரு பிரச்சினைக்கும் ஒரு ஆன்மீக தீர்வு உண்டு என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா? ஆன்மீகம் என்றாலே பயந்து பின்வாங்குபவர்களுக்கு …

Read More →

வாழ்க்கையின் ஒரு அரிய உண்மையை விளக்கும் ‘மூங்கிலின் கதை’

“என்னப்பா வாழ்க்கை எப்படி போகிறது” என்ற கேள்விக்கு எப்போதுமே நம் பல பேரிடம் இருக்கும் பதில், “அது எங்கேப்பா.. அப்படியே …

Read More →

எனது கதை

வாழ்க்கையில் லட்சியத்துடன் இரு, வெற்றியை நோக்கி ஓடு என்ற அறிவுரைகளை கேட்டு வளர்பவர்கள் தான் நாம். சமூகம் சொல்லும் விதிகளை, …

Read More →

உன் கையில்தான் மகனே…

ஒரு சிறுவன் தன் தாயிடம் சென்று “அம்மா யாரம்மா அந்த முதியவர், அந்த மலை மேல் உட்கார்ந்து கொண்டு தவம் …

Read More →

பொன்விதி தெரியுமா உங்களுக்கு?

உலகில் எல்லாவற்றிலும் எல்லாவர்க்கும் நன்மை பயக்க எல்லா மதங்களும் பின்வரும் ஒரு விஷயத்தை போதிக்கின்றன. இதனை நாம் “பொன் விதி” …

Read More →

மனம் விரும்பியதை நிகழ்த்திக் காட்டுங்கள் புத்தகத்தை வாங்கி பயன்பெறுங்கள்!!

Scroll to Top