இறைநிறை வாழ்க்கை - Inspired Life
“கர்ம யோகமே இந்த யுகத்தின் யோகம்" என்ற சுவாமி விவேகானந்தரின் மேலான கருத்தையும், திரு வேதாத்திரி மகரிஷி அவர்களின் "செயல் விளைவு தத்துவத்தின்" உண்மை ஆழத்தையும் உணர்ந்து இறைஅருளும், நிறைபொருளும் சமமாக இன்றைய வாழ்க்கைக்கு மிக அவசியம் என்று உணர்ந்து "Inspired Life (தமிழில் நமது நிறுவனரின் சொல்லாடலில் இறைநிறை வாழ்க்கை)" என்பதை அகம் அற்புதத்தின் இலக்காக நிர்ணயித்துள்ளார்.
அகம் அற்புதத்தின் தாய் நிறுவனமான “ஆல்ஃபா அட் ஒமேகா ஃபௌண்டேஷன்” தொடங்கப்பட்டப் போது அதன் நோக்கம் ஒன்றே ஒன்றாக தான் இருந்தது. ஏதோ ஒன்றினால் வாழ்க்கை முடிந்து போவதில்லை, ஒவ்வொரு முடிவிலும் ஒவ்வொரு ஆரம்பம் உண்டு என்ற நோக்கம் கொண்டே அந்த அர்த்தம் பொதியவே “ஆல்ஃபா அட் ஒமேகா” என்று பல்வேறு நாமகரண வாய்ப்புகள் மத்தியில் தேர்ந்தெடுக்கப் பட்டது.
எத்தனை இன்னல்கள் வந்தாலும், எத்தனை முறை விழுந்தாலும் வாழ்வில் நிச்சயம் மீண்டும் மீண்டும் மீண்டெழுந்து வெற்றிக்கொடி நாட்ட ஒரு வாய்ப்பு உண்டு என்று பறைசாற்றுவதாகவே இந்த பெயர் சூட்டப்பட்டது. அதுவே நோக்கமும் கூட. இந்த நோக்கத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்றால் ஒவ்வொரு மனிதனும் தனது “மனதின் அளவீடற்ற தன்மையை” மற்றும் “பிரபஞ்ச அபரிமிதத்தை” புரிந்து கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொண்ட எமது நிறுவனர் இந்த நோக்கத்தை ஊடகங்கள் வாயிலாக பூர்த்தி செய்யவே அதன் துணை அங்கமாக “அகம் அற்புதம்” தொடங்கினார்.
"உங்களுக்கு நிகழும் அதிசயம் என்று பேசுவதற்காக அல்ல நான் இன்று செயல்படுவது, நீங்கள் தான் அந்த அதிசயம் என்று உணர்த்துவதே என் தலையாய வேலை"
ஏ.வி.ஆர்., நிறுவனர்.
அகமே அற்புதம் செய்யும்
இந்த சொற்றொடரிலிருந்தே அகம் அற்புதம் என்ற பெயர் பிறந்தது. இதன் மகத்துவம் ஒவ்வொருவரும் அறிந்து கொண்டாலே சிறப்பான வாழ்க்கை நிச்சயம் உண்டு. இந்த வாசகத்தின் மேன்மை உணர்ந்த ஒவ்வொருவரையும் நாம் நகர்த்தி செல்ல விரும்பும் இலக்கு : “Inspired Life” (இறைநிறை வாழ்க்கை)
இங்கு "Inspired Life" என்பதன் பொருள்
Inspired Life என்பது, சொல்லுக்குச் சொல், “in-Spirit” வாழ்வது — டாக்டர் வெய்ன் டையரின் “Inspiration: Your Ultimate Calling” நூலிலும் விரிவுரையிலும் முதன்முதலில் இந்த விளக்கத்தை கண்ட நமது நிறுவனர் அதன் உண்மை அர்த்தத்தை ஆழமாக பலவிதத்திலும் அலசி ஆராய்ந்தார். வேய்ன் டையரின் மர்றுமொரு நூலான “The Shift” இல் லட்சியம் நிறைந்த வாழ்க்கைப் பாதையில் இருந்து அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு ஒருவரது வாழ்க்கையை மடை திருப்புவது பற்றி கற்றறிந்தார். பின்னர் கிழக்கத்திய தத்துவங்களும் மேற்கத்திய கருத்துக்களும் சங்கமிக்கும் மையப்புள்ளியை கண்டறிந்தார். பொருள் முதல்வாதமா, கருத்து முதல் வாதமா என்ற விவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக “இரண்டும் அளவோடு கலந்து நிறைந்த அர்த்தமிகு” நிறை வாழ்க்கையே சரியான சிறப்பான வாழ்க்கை என்பதை அறிந்தார்.
“கர்ம யோகமே இந்த யுகத்தின் யோகம்” என்ற சுவாமி விவேகானந்தரின் மேலான கருத்தையும், திரு வேதாத்திரி மகரிஷி அவர்களின் “செயல் விளைவு தத்துவத்தின்” உண்மை ஆழத்தையும் உணர்ந்து இறைஅருளும், நிறைபொருளும் சமமாக இன்றைய வாழ்க்கைக்கு மிக அவசியம் என்று உணர்ந்து “Inspired Life (தமிழில் நமது நிறுவனரின் சொல்லாடலில் இறைநிறை வாழ்க்கை)” என்பதை அகம் அற்புதத்தின் இலக்காக நிர்ணயித்துள்ளார்.
இதுவே இன்று முழு நோக்கம். மற்ற அனைத்தும் — புத்தகங்களும், கோர்ஸ்களும், சமூகமும், கருவிகளும் — இந்த ஒரே ஒரு விஷயத்தை நெருங்கக் கொண்டு வரவே இருக்கின்றன: நோக்கத்துடனும், அர்த்தத்துடனும் செழிப்புடனும், அமைதியுடனும் இவை அனைத்தையும் ஒருங்கே தரக்கூடிய இறைஅருளுடனும் கூடிய ஒரு வாழ்க்கை : Inspired Life (இறைநிறை வாழ்க்கை)
Inspired Life நோக்கிய அந்தப் பாதை
அகத்திலூடே பயணம் செய்யும் போது தன்னுள் உறையும் இறையை முழுமையாக உணர்வதும், அவ்வுணர்வால் புற பொருள் உலகிலும் அபரிமிதத்தை உள்ளவாறே அதன் உண்மை அர்த்தத்தில் உணர்ந்து சகல சௌபாக்கியத்தையும் பெற்று சந்தோஷம், சமாதானம், சகல சௌபாக்கியம் மற்றும் நல்லிணக்கத்தோடு கூடிய அற்புத வாழ்க்கை வழி செய்வதும் நோக்கமாக கொண்டதால் இந்த பெயர். இந்த அற்புதத்தை நிகழ்த்தும் ஒரு காண்போனாக (Observer) மட்டும் அல்லாமல் அந்த “காண்போனே” தான் தான் (Observer is the Observed), அந்த அற்புதத்தையெல்லாம் நிகழ்த்தும் அற்புதமே தான் தான், என்ற கருத்தை அகம் அற்புதம் முன் வைக்கிறது. இப்படி வாழ முடிந்தவனைத்தான் Inspired Life – இறைநிறை வாழ்க்கை வாழ்பவனாக அடையாளம் காண்கிறது.
- தோல்வியிலோ இழப்பிலோ சிக்கிய வாழ்க்கைகளை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவது;
- இளையோரை தங்கள் வாழ்க்கை நோக்கம் குறித்து விழிப்புணர்வு பெறச் செய்வது;
- காலம் கடந்த தத்துவங்கள் வெறும் கோட்பாடு அல்ல, அவை வளமான, நேர்மையான வாழ்க்கைக்கான நடைமுறைக் கருவி என நிரூபிப்பது;
- உள்ளிலிருந்து எழும் உண்மையான புரட்சியைக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது
- மனிதர்களில் அடிப்படை மாற்றத்திற்கான விதைகளை விதைப்பது
- ஜாதி, மத, இன, மொழி எனும் எல்லா எல்லை பேதங்களைக் கடந்து "எல்லாம் ஒன்றே" என்ற ஒருமைத்துவ தத்துவத்தின் மகத்துவத்தை உணர்த்துவது.
- இதே மறுசீரமைப்பை கல்வி மற்றும் சமூக நிர்வாகத் துறையிலும் கொண்டு செல்வது
- ஏதேனும் கிராமப்புற அல்லது சிறு-நகர்ப்புற பகுதியில், திறமை வாய்ந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்கும் திறன்சார் பள்ளி என்ற நீண்டகால கனவும் இதில் அடங்கும்.
ஆசிரியர்களும் பாரம்பரியமும்
இவை எதுவும் தனியே உருவாக்கப்பட்ட தனிப்பட்ட கருத்துக்களோ தனிப்பட்ட தத்துவங்களோ அல்ல. பல ஆண்டுகால உண்மையான கற்றலிலிருந்து கட்டமைக்கப்பட்டவை:
- ஜே. கிருஷ்ணமூர்த்தி — வாழ்க்கை மற்றும் வாழ்தல் குறித்த அவரது போதனைகள், எங்கள் நிறுவனரின் மிகக் கடினமான ஆண்டில் அவரைச் சந்தித்து, அவரை மீண்டும் வாழ வைத்தது. வாழ்க்கை மற்றும் கல்விக்கான புதிய பார்வையை கற்றுக் கொடுத்தது.
- ரமண மகரிஷி - தனது தேடலில் மகரிஷி அவர்களின் "ஆத்மவிசாரம்" மிக முக்கிய பங்காற்றியது என நமது நிறுவனர் பல்வேறு இடங்களில் தெரிவித்துள்ளார்.
- வேதாத்திரி மகரிஷி — இவரது SKY யோகாவும் வேதாத்திரியம் தத்துவமும், அகம் அற்புதத்தின் இந்த பணியின் மையத்திலுள்ள தினசரி பழக்கங்களை வடிவமைத்திருக்கின்றன.
- யுக்தேஷ்வர் கிரி மற்றும் பரமஹம்ச யோகாநந்தா - இன்னலற்ற புதிய உலகத்திற்கான தேடலில் நமது நிறுவனரை சந்தித்த இவர்களது போதனைகளும் நூல்களும் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன
- டாக்டர் வெய்ன் டையர் — "Inspired Life" என்ற சொல்லுக்கும் அதன் பொருளுக்கும் (in-Spirit வாழ்தல்) மூலம் இவரின் புத்தகத்திலேயே கண்டறியப்பட்டது. தெய்வீக விருப்பத்தின் படி வாழ்தல் என்ற மைய நோக்கமும் இவரிடமிருந்தே பெறப்பட்டது.
- டாக்டர் ஜோசஃப் மர்ஃபி - இவரின் ஆழ்மனதின் அற்புத சக்தி புத்தகம் தெள்ளத் தெளிவாக ஆழ்மனதின் அளவற்ற ஆற்றலைக் குறித்து கற்பித்திருக்கிறது. இந்த ஆசிரியரின் பிற நூல்கள் வழி ஆழ்மனதிற்கும் தெய்வீக விருப்பத்திற்கும் இடையே உள்ள ஆழமான தொடர்பு அறியப்பட்டது. • நெப்போலியன் ஹில் - வாழ்க்கையில் நிலையான நோக்கத்தின் முக்கியத்துவத்தை குறித்தும் விடாமுயற்சி ஆறாம் அறிவு உள்ளிட்ட வெற்றிக்கான கொள்கைகள் குறித்தும் இவ்வாசிரியரின் நூல்கள் பயிற்றுவிற்றிருக்கின்றன.
- நெப்போலியன் ஹில் - வாழ்க்கையில் நிலையான நோக்கத்தின் முக்கியத்துவத்தை குறித்தும் விடாமுயற்சி ஆறாம் அறிவு உள்ளிட்ட வெற்றிக்கான கொள்கைகள் குறித்தும் இவ்வாசிரியரின் நூல்கள் பயிற்றுவிற்றிருக்கின்றன.
- இது தவிர பிற நவீன புதுயுக ஆசிரியர்களான ராபின் ஷர்மா, தீபக் சோப்ரா, ஆபிரகாம் ஹிக்ஸ், ஓஷோ, சத்குரு ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட மற்றவர்களின் போதனைகளும் இப்பாதையை வழிநடத்தியுள்ளன.
இது என்ன அல்ல?
அகம் அற்புதத்தின் இந்த “Inspired Life – இறைநிறை வாழ்க்கை” நோக்கமானது, பிரபஞ்ச விதிகளையும், ஆழ்மனத்தையும், பல மரபுகளின் போதனைகளையும் அடிப்படையாகக் கொண்டது. ஆனாலும் கூட உங்கள் சொந்த தனிப்பட்ட நம்பிக்கையை ஒருபோதும் விட்டுவிடச் சொல்லாது. நமது தத்துவம் ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, இனத்தையோ, இடத்தையோ வேறு எந்த பிரிவையோ சாராதது. “எல்லாம் ஒன்றே” என்ற பிரபஞ்ச தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. இது கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் — உண்மையைத் தேடி ஒரு உள்முக பயணம். அதற்கு மேலும் இல்லை, குறைவும் இல்லை. அதுதான் முதல்படி. அந்த முதல்படியே அனைத்தையும் பார்த்துக் கொள்ளும்.
இன்னலற்ற உலகத்திற்கான நமது முயற்சியில் பங்கு கொள்ளுங்கள்
அகம் அற்புதம் தனது உன்னத நோக்கங்களை ஈடேற்ற உங்களால் உதவ முடியும்.
நீங்கள் செலுத்தும் ஒவ்வொரு ரூபாயும் மனிதம் தழைக்க வைக்க உதவும் உன்னத திட்டங்களிலேயே செலவழிக்கப்படுகிறது.
