நமது இரண்டாவது சந்திப்பு ″லட்சியத்தில் இருந்து அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு என்ற தலைப்பில் 17 டிசம்பர் 2017 அன்று நடந்தது. அதன் காணொளி தொகுப்புகள் தான் கீழே தரப்பட்டுள்ளன. நமது வாழ்க்கை நோக்கம் என்ன, அதை எப்படி கண்டறிவது, அதைத் தடுக்கும் காரணிகள் எவை எவை, எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுவதால் பிரபஞ்சம் எப்படி நம்முடன் இணக்கமாக செயல்படும் என்று பல விஷயங்கள் இந்த கலந்துரையாடலில் பேசப்பட்டது. அவை முறையே 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டு தரப்பட்டுள்ளது.