நாங்கள் யார்?
அகம் அற்புதம், 18 ஜனவரி 2012 அன்று நிறுவப்பட்ட தொண்டு நிறுவனமான ஆல்ஃபா அட் ஒமேகா ஃபவுண்டேஷனின் மீடியா மற்றும் கல்விப் பிரிவாகும். தனது தாய் நிறுவனத்தின் நோக்கத்தை பூர்த்தி செய்யும் விதமான பணிகள் மக்களை சென்றடைவதற்கான வழியாக, அகம் அற்புதம் 8 அக்டோபர் 2017 அன்று தொடங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை ஊடகம், சமூக ஊடகம், புத்தகங்கள், பயிற்சி வகுப்புகள் வாயிலாக பல்வேறு வழிகளில் செயல்பட்டு வருகிறது.
தொடக்கம்
பலரைப் போலவே, எங்கள் நிறுவனரும் ஒருகாலத்தில் வெற்றி என்பது உலகம் நினைக்கும் பெரிய வாழ்க்கையை அடைவது என நம்பினார். அனிமேஷன் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் துறையில் பல ஆண்டுகள் அனுபவத்திற்குப் பின், 2010ல் அவர் தனது சொந்த ஸ்டூடியோவைத் தொடங்கினார். ஆனால் அவர் கட்டியெழுப்பியதாக நினைத்த அனைத்துடனும் அந்நிறுவனம் சில மாதங்களிலேயே அது சரிந்தது — கூடவே அவரது லட்சியக் கனவுகள் தவிடு பொடியாகின.
அந்த மன அழுத்தம் ஒரு பக்கவாதத்தை (stroke) விளைவித்தது. முற்றிலும் நடக்க முடியாத அவர், ஒன்பது மாதங்களுக்கு அவர் தனது தனி அறையில் தன்னைத் தானே அடைத்துக் கொண்டார். கேள்விகள் பிரளயமாக மனதில் ஓடின. ஒவ்வொரு கேள்விக்கும் தெளிவுதரும் பதில்கள் அவருக்கு எங்கேயிருந்தோ கிடைக்க ஆரம்பித்தது. பிரளயத்திற்கு பின் அமைதி என்பது போல மனம் தெளிவிலும் அமைதி கொண்டது.
அந்த அமைதியில், எஞ்சியிருந்த ஒரே ஒரு கேள்வி: என்னிடம் இருப்பதெல்லாம் என்னிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது என்றால், உண்மையில் என்னிடம் என்ன மீதம் இருக்கிறது?
அந்த கேள்விக்கான பதில் மெதுவாக எப்போதும் போல தன்னுள் கடந்து வந்தது. “ஏதுமில்லாததே யாதுமாகி நிற்கிறது“. பூஜ்ஜியத்தைப் போல — பிரிக்க முடியாத, முடிவு எல்லையற்ற ஒரு எண் — மீதமிருந்தது வெறுமை அல்ல. பூஜ்ஜியத்தை எஹ்து கொண்டு வகுத்தாலும் கிடைக்கும் பின்னம் அது. முடிவிலி. தனக்கு கிடைத்த வெளிப்பாடின் பரவசம் கொண்டு “ஏதுமில்லாதவனான தன்னகத்தில்” இருக்கும் முடிவிலா அனுபவங்களையும் படிப்பினைகளையும் கண்டார். அவற்றிலே இருந்த வடிவமைப்புகளை (Patterns) கண்டார். இந்த அனுபவங்கள் பகிரத்தக்கவை, படிப்பிக்கத் தக்கவை மற்றும் யாராலும் பறிக்க முடியாதவை என்றறிந்தார்.
அதற்குப் பிறகு அவரைச் சந்தித்த ஜே. கிருஷ்ணமூர்த்தியின் போதனைகள்தான், அவரை மீண்டும் உயிர்ப்புடன் உணரச் செய்தன. தனது அனிமேஷன் துறை ஆசான் திரு ஆர். சந்திரசேகரிடம் இருந்து ஜே.கேவை பற்றி அறிந்த அவர் உலக வாழ்க்கையின் மற்றொரு கோணத்தை ஜே கிருஷ்ணமூர்த்தியின் போதனைகள் வழி உணர்ந்தார். வாழ்க்கையையே முற்றிலும் வேறு விதமாகப் பார்க்கும் ஒரு பார்வையை கிருஷ்ணாஜியின் போதனைகள் அவருக்கு அளித்தன. அந்த உணர்தலே ஆல்ஃபா அட் ஒமேகா ஃபவுண்டேஷனாக மலர்ந்தது, அதிலிருந்து அகம் அற்புதம் இன்று வரை கட்டியெழுப்பியது அனைத்தும் உருவானது.
நன்மைகள் நிறைந்த அற்புத உலகம்
காலத்தால் மாறாத இரண்டு உண்மைகள் வழியாக நாங்கள் கற்பிக்கிறோம்: வாழ்க்கை உண்மையில் எப்படி இயங்குகிறது என்பதை நிர்ணயிக்கும் பிரபஞ்ச விதிகள், மற்றும் ஒருவரின் அக உலகை அவரது திறனுடன் இணைக்கும் ஆழ்மனதின் ஆற்றல். இவை இரண்டும் சேர்ந்ததே எங்கள் நிறுவனர் "Human Excellence" என அழைக்கும் "நன்மைகள் நிறைந்த அற்புத உலகம்" என்ற இலக்கை நோக்கிய "மேம்பட்ட வாழ்க்கைப் பாதை".
தனிமனித மேம்பாடு (Human Excellence)
Improving lives one step at a time with our non-profit organization.
மனிதம் தழைத்த இன்னலற்ற நல்லுலகம்
Creating opportunities and a better future with our non-profit organization.
எங்கள் அணுகுமுறை
காலத்தால் மாறாத இரண்டு உண்மைகள் வழியாக நாங்கள் கற்பிக்கிறோம்: வாழ்க்கை உண்மையில் எப்படி இயங்குகிறது என்பதை நிர்ணயிக்கும் பிரபஞ்ச விதிகள், மற்றும் ஒருவரின் அக உலகை அவரது திறனுடன் இணைக்கும் ஆழ்மனதின் ஆற்றல். இவை இரண்டும் சேர்ந்ததே எங்கள் நிறுவனர் “Human Excellence” என அழைக்கும் “நன்மைகள் நிறைந்த அற்புத உலகம்” என்ற இலக்கை நோக்கிய “மேம்பட்ட வாழ்க்கைப் பாதை“.
இவை அனைத்தின் மையத்திலும் ஒரே ஒரு நோக்கம் மட்டுமே இருக்கிறது: லட்சியங்கள் கடந்த ஒரு அர்த்தமுள்ள, ஒரு உன்னத நோக்கமுள்ள வாழ்க்கையை — நாங்கள் “Inspired Life” (அருட்பெரு வாழ்வு) என அழைக்கும், உள்ளுணர்வோடு (in-Spirit) வாழும் — அந்த அற்புத வாழ்க்கையை வாழ சக மனிதர்களுக்கு உதவுவது.
எப்படி செய்கிறோம்?
-
புத்தகங்கள்
எங்கள் நிறுவனரின் அதிகம் வாசிக்கப்பட்ட படைப்பான "மனம் விரும்பியதை நிகழ்த்திக் காட்டுங்கள்" முதல் (ஈர்ப்பு விதி உட்பட்ட பிரபஞ்ச விதிகளையும் ஆழ்மனதின் அற்புத சக்தியையும் அவற்றின் உண்மையான ஆழத்தில் கற்பிக்கும் நூல்), "ஆதியில் விதிகள் உண்டாயிற்று" உள்ளிட்ட மற்ற நூல்கள் வரை
-
உறுப்பினர் பதிவு (Membership)
நேரடி மற்றும் ஆன்லைன் நேரலைப் பயிற்சிகள், பதிவுகள் (recordings), இதர கற்றல் கருவிகள் அடங்கிய நமது அகம் அற்புதம் மெம்பெர்ஷிப் இணையதளம். அதன் பலன்களை பெற நீங்கள் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.
-
Tranform Me - தன்மாற்றப் பயணம்
அகம் அற்புதம் மெம்பெர்ஷிப் இணைய தளத்தில் வாழ்க்கை வளமளிக்கக் கூடிய முக்கிய விஷயங்களை Transorm-ME கற்றல் பாதைகளாக தொகுத்து அளித்திருக்கிறோம். இவற்றை நமது மெம்பெர்ஷிப் தளத்தில் Contribution அடிப்படையில் பெறலாம்.
-
SuperMME பயிற்சி
ஆண்டுக்கு இருமுறை, அழைப்பின் பேரில் மட்டும் நடக்கும் நமது முக்கிய நான்கு நிலைகள் பயிற்சிப் பாதை
-
பெட்டகம் (Pettagam)
வாழ்க்கை வளத்திற்கான மற்றும் மனதின் ஆற்றலை பயன்படுத்த உதவும் பல்வேறு கருவிகள் அடங்கிய புதையல்கள் போன்ற தொகுப்புகள், தனித்தனி Editions ஆக வெளியிடப்படுகின்றன.
-
இதர தயாரிப்புகள் (Products)
சிறப்பான வள வாழ்க்கையை உறுதி செய்யக்கூடிய மற்றும் அன்றாட தினசரி வாழ்க்கைக்கு பயன்படக் கூடியதுமான பல்வேறு விதமான சுயப்பிரகடன அட்டைகள், நாட்குறிப்புகள், கருவிகள் உள்ளிட்ட தயாரிப்புகளை சந்தைப் படுத்துகிறோம்.
01.
Prove every project
Our Non-profit Organisation delivers transparent and accountable results for every project we undertake.
02.
Open book
We firmly believe in transparency and strive to maintain an open book approach with all stakeholders.
03.
Local partnerships
Building strong relationships with the community is vital and we work closely with local partners.
இன்னலற்ற உலகத்திற்கான நமது முயற்சியில் பங்கு கொள்ளுங்கள்
அகம் அற்புதம் தனது உன்னத நோக்கங்களை ஈடேற்ற உங்களால் உதவ முடியும்.
Every dollar counts and helps us bring hope, joy, and essential resources to those in need. Together, we can create a better tomorrow.
நீங்கள் எப்படியெல்லாம் எங்களுக்கு உதவலாம்!
Non-profit Organisation's vision is to create a world where all people have equal access to education and healthcare. Our mission is to provide the necessary resources and support to underprivileged communities to improve their quality of life.
- உறுப்பினராக பதிவு செய்து எங்களுடன் இணையுங்கள் - உறுப்பினர் பதிவு முற்றிலும் இலவசம். இதன் மூலம் நீங்கள் நமது அனைத்து ஆன்லைன் நேரலை நிகழ்ச்சிகள், பயிற்சிகள், பயிற்சி வகுப்புகள் கலந்துரையாடல்களில் கலந்து கொள்ளலாம். நமது இணையதளத்தில் கம்யூனிட்டி மெம்பெராகி மெம்பெர் தளத்தில் பதிவேற்றப்பட்ட பகுதிகளுக்கு சென்று பயின்று பலனடைய ரூ.49 முதல் நீங்கள் விருப்பப்பட்ட தொகையை மட்டும் செலுத்தி அணுகலாம். வெறும் உள்ளடக்கத்தை மட்டுமே கொடுப்பது அல்ல எமது நோக்கம், இது ஒரு ஆக்கபூர்வமான நோக்கத்திற்கு அனைவரையும் பங்கேற்க செய்வதின் ஒரு வழி.
- செய்தியைப் பரப்புங்கள் — அகம் அற்புதத்தின் ஏதேனும் ஒரு செயல்பாடு மூலம் உங்களுக்கு பலன் கிட்டியிருக்குமாயின் உங்களுக்கு உதவியது வேறு யாருக்காவது தேவைப்படுமானால் அதைப் பகிருங்கள்.
- தன்னார்வலராக செயல்படுங்கள் — நமது அகம் அற்புதம் தனது உன்னத நோக்கத்தை அடைய பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகிறது. சமூகம் வளரும்போது, மொழிபெயர்ப்பு, சமூக ஆதரவு போன்றவற்றில் தன்னார்வலர்களுக்கு இடம் இருக்கும். உங்கள் விருப்பத்தை எமக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.
இவற்றை தாண்டி நாங்கள் நோக்கி நகரும் எமது நிறுவனரின் இன்னொரு நீண்டகால கனவும் உண்டு: கிராமப்புற அல்லது வளர்–நகர்ப்புற பகுதியில் ஏதேனும் ஒன்றில் அல்லது சிலவற்றில், திறமைகள் இருந்தும் முன்னேற முடியாத அத்தகைய வாய்ப்பு அரிதாகவே கிடைக்கும் பின்னணியிலிருந்து வரும் நிராதரவற்ற குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்கும் “மதிப்பெண்ணோ தரவரிசையோ அல்லாத, ஜே. கிருஷ்ணமூர்த்தியின் “கற்றதை மறுபரிசீலனை செய்தல்” (unlearning) என்ற கல்விப் பார்வையின் அடிப்படையில்”ஒரு முழு திறன்சார் பள்ளி — . இந்த எதிர்காலத்தை கட்டியெழுப்ப நீங்கள் உதவ விரும்பினால், எங்களை நீங்கள் அணுகலாம்.
