அகத்திலூடே பயணம், புறத்தே அற்புத வாழ்க்கை
அகத்திலூடே பயணம் செய்யும் போது ‘தன்னுள் உறையும் இறையை’ முழுமையாக உணர்வதும், அவ்வுணர்வால் புற பொருள் உலகிலும் ‘அபரிமிதத்தை’ உள்ளவாறே அதன் உண்மை அர்த்தத்தில் உணர்ந்து சகல சௌபாக்கியத்தையும் பெற்று சந்தோஷம், சமாதானம், சகல சௌபாக்கியம் மற்றும் நல்லிணக்கத்தோடு கூடிய அற்புத வாழ்க்கை வழி செய்வதுவும்
ஆல்ஃபா அட் ஒமேகா நோக்கம் (Vision)
ஆல்ஃபா அட் ஒமேகா மையம் தொடக்கம் முதலே கருத்தில் கொண்டுள்ள ஒரு நோக்கம் உண்டு. அதன் பெயர் காரணமும் அதுவே. “ஒவ்வொரு முடிவிலும் ஒவ்வொரு ஆரம்பம்” என்ற அர்த்தம் பொருந்தவே “ஆல்ஃபா அட் ஒமேகா” என்ற பெயர் நாம் வைக்க காரணமானது.
வாழ்க்கையில் எல்லாமே முடிந்து விட்டது. இனி ஒன்றுமில்லை என்று நம்பிக்கை இழந்திருப்பவர்களுக்கு, எதுவும் முடிந்து விடவில்லை, இந்த உலகில் எல்லாம் அபரிமிதமாய் கொட்டிக் கிடக்கிறது. பிரபஞ்சம் தாயன்போடு அவற்றை அடையவும் வாழ்க்கையை முழுவதுமாக அனுபவிக்கவும் தாயன்போடு வழிநடத்துகிறது என்ற ஆழ்நம்பிக்கையை விதைப்பது தான் நம் முக்கிய நோக்கம்.
நான் ஒன்றுமில்லை என்று நினைப்பவருக்கு பிரபஞ்ச தத்துவமான “ஒன்றுமில்லாததே யாதுமாய் நிற்கிறது” என்ற பேருண்மையின் நுணுக்கத்தை அவர்கள் அகத்தே அறிய வழி செய்து, இந்த பிரபஞ்சம் எல்லயில்லா சாத்தியக்கூறுகளின் இருப்பிடம் என்றுணர்த்தி அதன் வழி சந்தோஷம், சமாதானம், சகல சௌபாக்கியத்தோடு, அனைத்தோடும் நல்லிணக்கத்தோடு கூடிய வாழ்க்கை வாழ வழி செய்வது.
சத்யயுகத்தின் வித்துக்கள்
மிக முக்கியமாக இன்னலுற்ற இந்த உலகில், ஒவ்வொருவரும் தன் அகத்தின் ஆற்றல் உணர்ந்து, அடிப்படை மாற்றத்திற்கு உள்ளாகி, நன்மைகள் நிறைந்த உலகை உருவாக்குவதற்கான நமது நிறுவனரின் சொற்களில் கூற வேண்டுமானால் “சத்யயுகத்திற்கான வித்துக்களாக” மாற்ற ஆவன செய்வது.
ஆல்ஃபா அட் ஒமேகா பணி (Mission)
- தோல்வியிலோ இழப்பிலோ சிக்கிய வாழ்க்கைகளை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவது;
- இளையோரை தங்கள் வாழ்க்கை நோக்கம் குறித்து விழிப்புணர்வு பெறச் செய்வது;
- காலம் கடந்த தத்துவங்கள் வெறும் கோட்பாடு அல்ல, அவை வளமான, நேர்மையான வாழ்க்கைக்கான நடைமுறைக் கருவி என நிரூபிப்பது;
- உள்ளிலிருந்து எழும் உண்மையான புரட்சியைக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது
- மனிதர்களில் அடிப்படை மாற்றத்திற்கான விதைகளை விதைப்பது
- ஜாதி, மத, இன, மொழி எனும் எல்லா எல்லை பேதங்களைக் கடந்து "எல்லாம் ஒன்றே" என்ற ஒருமைத்துவ தத்துவத்தின் மகத்துவத்தை உணர்த்துவது.
- இதே மறுசீரமைப்பை கல்வி மற்றும் சமூக நிர்வாகத் துறையிலும் கொண்டு செல்வது
- ஏதேனும் கிராமப்புற அல்லது சிறு-நகர்ப்புற பகுதியில், திறமை வாய்ந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்கும் திறன்சார் பள்ளி என்ற நீண்டகால கனவும் இதில் அடங்கும்.
அகம் அற்புதம் — முதன்மை நோக்கம்
(26 மார்ச் 2026 அன்று நிறுவனரால் எழுதப்பட்டது)
ஆல்ஃபா அட் ஒமேகாவின் நோக்கங்களை கருத்தியல் ரீதியாக தமிழ் பேசும் நல்லுலகத்திற்கு ஊடகம் வாயிலாக எடுத்து செல்வதை நோக்கமாக கொண்டே “அகம் அற்புதம்” குழு தொடங்கப் பட்டிருந்தாலும் பிரபஞ்சமே பல்வேறு காலக்கட்டங்களில் வழிநடத்தி அதன் செயல்பாடுகளைக் கட்டமைத்து இன்றிருக்கும் நிலையை அடைய உதவி இருக்கிறது. தாய் நிறுவனமான ஆல்ஃபா அட் ஒமேகாவின் நோக்கத்திற்கு உற்றதுணையாக இருக்கும் வகையில் அகம் அற்புதம் செயல்பாடுகளை திரட்டி நமது நிறுவனர் எழுதிய தெளிவான முதன்மை நோக்கம் பின்வருமாறு:
அகம் அற்புதம் முதன்மை நோக்கம்: ஒவ்வொரு தனிமனிதனும் தன் அகத்தின் ஆற்றல் உணர்ந்து, உள்முக பயணம் வாயிலாக தன்னுள் உறையும் இறையுணர்ந்து, என்றென்றும் எல்லாம் வல்ல இறைபேராற்றல் தாயன்போடு வழிநடத்தும் என்ற நம்பிக்கை கொண்டு, "அகமே அற்புதம் செய்யும்" என்ற சூட்சுமத்தை முழுவதும் உணர்ந்து இவற்றால் உள்ளெழுச்சி பெற்று புறத்தே உத்வேகத்துடன் தனது வாழ்க்கை நோக்கம் அறிந்து தனக்கிட்ட செயல்கள் செய்து சந்தோஷம், சமாதானம், சகல சௌபாக்கியமும் பெற்று உலகில் அனைத்தோடும் நல்லிணக்கத்தோடு பேரானந்த வாழ்க்கை வாழ வழிவகுப்பதே முதன்மை நோக்கம்.
ஏ.வி.ஆர். - நிறுவனர், அகம் அற்புதம்
நமது ‘Inspired Life’ எனும் உன்னத உயரிய நோக்கம்:
லட்சியம் நிறைந்த வாழ்க்கை கடந்த உள்ளெழுச்சிப் பெற்ற அர்த்தமுள்ள வாழ்க்கையையே நாம் உள்ளெழுச்சி பெற்ற இறைநிறை வாழ்க்கை Inspired Life (Life in-spirit) என்கிறோம். அகம் அற்புதம் வழி அமைதி, செழிப்பு, மகிழ்ச்சி நல்லிணக்கம் (P²H²) கூடிய ஒரு சிறப்பான வாழ்க்கையை வாழ, பிரபஞ்ச விதிகளையும் ஆழ்மனதின் அற்புத ஆற்றலையும் பயன்படுத்தி ஒரு சிறப்பான தினசரி வாழ்க்கைமுறையை அமைத்து, தன் மனம் விரும்பிய கனவு வாழ்க்கையை தக்கபடி அமைத்து மாற்றத்தை “தான்” முதல் குடும்பம், சமூகம், உலகம் என்ற வரிசையில் இறை உள்ளிலிருந்து உணர்த்திய நோக்கத்துடன் வாழ மனிதர் ஒவ்வொருவருக்கும் கற்பிப்பதே அகம் அற்புதம் தன் நோக்கத்தை பூர்த்தி செய்ய எடுத்திருக்கும் தலையாய பணி.
இன்னலற்ற உலகத்திற்கான நமது முயற்சியில் பங்கு கொள்ளுங்கள்
அகம் அற்புதம் தனது உன்னத நோக்கங்களை ஈடேற்ற உங்களால் உதவ முடியும்.
நீங்கள் செலுத்தும் ஒவ்வொரு ரூபாயும் மனிதம் தழைக்க வைக்க உதவும் உன்னத திட்டங்களிலேயே செலவழிக்கப்படுகிறது.
