Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest

மனக்காட்சிப் படைப்பும் ஈர்ப்பு விதியும் – Creative Visualization

மனக்காட்சிப் படைப்பும் ஈர்ப்பு விதியும் – Creative Visualization

“மனக்காட்சிப் படைப்பு”

இந்த வார்த்தையை நீங்கள் அடிக்கடி கேட்டிருக்கக்கூடும். பல விளையாட்டு வீரர்கள், மற்ற பயிற்சிகளை காட்டிலும் இந்த கலையை பயன்படுத்தி தாங்கள் எட்டிய உயரத்தை, தங்கள் படைத்த சாதனைகளை பற்றி பேசி இருப்பதைப் படித்திருப்பீர்கள். அவர்கள், அந்த ஒட்டப்பந்தயத்தையோ, விளையாட்டுப் போட்டியோ தங்கள் மனதில் உண்மை என காட்சிப்படுத்தி, அது நடைபெறும்பொழுது ஏற்படும் மகிழ்ச்சி, ஆனந்தம், பேருவகை போன்றவற்றை இந்த நொடியிலேயே உணரும்பொழுது, அவர்கள் அந்த போட்டிக்கு தங்களை முழு வீச்சில் தயார் செய்து கொள்கிறார்கள்.

Creative Visualization

1984 ல், Dr. Dennis Waitley என்பவர் இந்த யுக்தியை ஒலிம்பிக் வீரர்களிடம் பயன்படுத்தினார். 1986 ல் அவர் எழுதிய “THE PSYCHOLOGY OF WINNING”  என்ற பிரபலமான புத்தகத்தில், மனக்காட்சிப் படைப்பு திறனை கொண்டு எப்படி வெற்றிகரமான வாழ்க்கையை அமைத்துக்கொள்வது என்று விரிவாக எழுதியுள்ளார். இந்த கலையை கொண்டு அவர் பயிற்றுவித்த வீரர்களின் ஒலிம்பிக் செயல்திறன் வியக்கவைக்கும் அளவில் இருந்தன.

Click here to buy the book THE PSYCHOLOGY OF WINNING

நீங்கள் எண்ணுவது எதுவாக இருந்தாலும், உங்கள் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் நீங்கள் விரும்பினாலும், அதை முழுவதுமாக,தெளிவாக உணர்ந்து காட்சிப்படுத்துதல் அவசியம். இதற்கு தினம்தோறும் நேரம் ஒதுக்க வேண்டும். இது எப்படி நடக்கும் என்பதைப்பற்றிய கவலை தேவை இல்லை. ஆனால், முழு நம்பிக்கையோடு நம் மனக்கண்ணில் இதை காட்சிப்படுத்தும் பொழுது, அதில் நிலைகொள்ளும்பொழுது, நம் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான விதையை நாம் வலிமையாக விதைக்கிறோம்.

பொருள் ரீதியான விருப்பங்கள் எளிதாக கற்பனை செய்ய முடியும் என்பதால், அத்தகைய மனக்காட்சிப் படைப்புகளில் இருந்து தொடங்குவது நல்லது. ஈர்ப்பு விதிக்கு பெரியது, சிறியது என்ற பாகுபாடு கிடையாது. ஆனால், நம் மனதிற்கு உண்டு. நம்முடைய சிறிய  விருப்பங்கள் நிறைவேறும்பொழுது, இந்த கலையின் மீதும், நம்முடைய ஆற்றலின் மீதும் நமக்கு பெரும் நம்பிக்கை ஏற்படும்.

மனக்காட்சிப் படைப்பின் வெற்றி அதில் நம் வைக்கும் சின்ன சின்ன நுணுக்கங்களில் தான் இருக்கிறது. உங்கள் மனக்காட்சிகள் எத்தனை விரிவாக, விவரமாக, தெளிவாக உள்ளதோ, அத்தனை விரைவாக உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். இதற்கு உணர்வுபூர்ணமான அணுகுமுறை தேவை.

Creative Visualization

உதாரணத்திற்கு, உங்களுக்கு ஒரு கார் தேவைப்படுகிறது. அது என்ன BRAND, என்ன COLOUR, என்ன NUMBER, என்ன வடிவம், போன்றவற்றை, கடைசி விவரம் (DETAILS) வரை மனதில் காட்சிப்படுத்த வேண்டும். 

இது எப்படி நடக்கும் என்று தெரியாவிட்டால் பரவாயில்லை. அதைப்பற்றிய எந்தவொரு எண்ணமும் வேண்டாம். அது பயத்தை உருவாக்கி, எதிர்மறை எண்ணங்களை உண்டாக்கும். அதற்கு பதிலாக, அந்த காரை பணம் செலுத்தி வாங்குவது போல, அந்த காரை நீங்கள் ஒட்டிக்கொண்டு இருப்பது போல, உங்கள் குடும்பத்தினருடன் சுற்றுலா போவது போல, உங்கள் அலுவலகத்திற்கு செல்வது போல, தினம் அந்த காரை சுத்தப்படுத்துவது போல என்று எத்தனை காட்சிகளை மனதில் உண்டாக முடியுமோ, உண்டாக்குங்கள். எல்லாமே உணர்வுபூர்வமாக, நிகழ்காலத்தில் நடைபெறுவதாக இருக்க வேண்டும். அந்த CAR ஏற்கனவே உங்களிடம் இருந்தால் என்னவெல்லாம் செய்வீர்கள் என்று உங்கள் மனதில் காட்சிப்படுத்தி ஒரு திரைப்படம் போல ஓடவிடுங்கள்.

இதில் உங்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி, ஆனந்தம், நிறைவுத்தன்மை ஆகியவை நீங்கள் விரும்பும் உங்கள் எதிர்காலத்தை, இப்பொழுதே உங்கள் கைவசம் கொண்டு வந்து சேர்க்கும் ஆற்றல் கொண்டது.

தொடங்குங்கள் இப்பொழுதே !

வாழ்க இவ்வயகம் !                            வாழ்க வளமுடன் !

[simple-author-box]

 

 

நல்ல விஷயங்களை பகிர்ந்து உதவுங்கள்!

Editorial Team

Editorial Team

3 thoughts on “மனக்காட்சிப் படைப்பும் ஈர்ப்பு விதியும் – Creative Visualization”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Top Posts

புத்தக புதையல்

உங்கள் தர்மத்தில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா? – “போதியின் நிழல்” உணர்த்தும் வாழ்க்கைப் பாடம்

வாழ்க்கையில் தாம் எடுத்த காரியத்தை செவ்வனே முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் ஆயிரத்தில் ஒருவராகவே இருப்பர். அதிலும் அந்த காரியம் பெரியதாக …

Read More →

நிறைவான வாழ்க்கையை உறுதி செய்யும் டாக்டர் வேய்ன் டயரின் 7 புத்தகங்கள்

வாழ்க்கையின் எந்தவொரு பிரச்சினைக்கும் ஒரு ஆன்மீக தீர்வு உண்டு என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா? ஆன்மீகம் என்றாலே பயந்து பின்வாங்குபவர்களுக்கு …

Read More →

வாழ்க்கையின் ஒரு அரிய உண்மையை விளக்கும் ‘மூங்கிலின் கதை’

“என்னப்பா வாழ்க்கை எப்படி போகிறது” என்ற கேள்விக்கு எப்போதுமே நம் பல பேரிடம் இருக்கும் பதில், “அது எங்கேப்பா.. அப்படியே …

Read More →

எனது கதை

வாழ்க்கையில் லட்சியத்துடன் இரு, வெற்றியை நோக்கி ஓடு என்ற அறிவுரைகளை கேட்டு வளர்பவர்கள் தான் நாம். சமூகம் சொல்லும் விதிகளை, …

Read More →

உன் கையில்தான் மகனே…

ஒரு சிறுவன் தன் தாயிடம் சென்று “அம்மா யாரம்மா அந்த முதியவர், அந்த மலை மேல் உட்கார்ந்து கொண்டு தவம் …

Read More →

பொன்விதி தெரியுமா உங்களுக்கு?

உலகில் எல்லாவற்றிலும் எல்லாவர்க்கும் நன்மை பயக்க எல்லா மதங்களும் பின்வரும் ஒரு விஷயத்தை போதிக்கின்றன. இதனை நாம் “பொன் விதி” …

Read More →

மனம் விரும்பியதை நிகழ்த்திக் காட்டுங்கள் புத்தகத்தை வாங்கி பயன்பெறுங்கள்!!

Scroll to Top