உங்கள் மேலான பங்களிப்பைக் கோருகிறோம்

அக்டோபர் 8, 2026 முதல் நமது மெம்பெர்ஷிப் இலவசமாக்கப் பட்டுள்ளது. அனைவரும் அனைத்து நேரலை நிகழ்ச்சிகளில் எவ்வித கட்டணமுமின்றி பங்கேற்கலாம். ஒருவர் பணம் காரணமாக நான் இதை கற்கவில்லை என சொல்லிவிடக் கூடாது என்ற மேலான எண்ணத்திலேயே இந்த திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது. எனினும் நமது நல்ல உன்னதமான திட்டங்கள் ஈடேற தொழில்நுட்ப செலவுகள் உள்ளிட்டவையை சந்திக்க வேண்டி இருக்கிறது. இவற்றை செவ்வனே செய்ய உங்கள் பங்களிப்பு அவசியமாகிறது.

கட்டாயங்களில்லாத பங்களிப்பு.

ஒரு புதிய உலகத்தை கட்டமைக்க வேண்டிய பொறுப்பு இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கிறது. ஆனால் எங்கே தொடங்குவது, எதில் தொடங்குவது என்று எல்லோருக்குமே எப்போதுமே கேள்விகள் இருந்து வருகிறது. “Be the Change you wish to See” என்று மகாத்மா காந்தி சொன்ன ஒரு வாசகம் உண்டு. இப்போது “அந்த மாற்றமாகவே” நான் எப்படி மாறுவது? என்பது தான் கேள்வியே. இதை பயிற்றுவிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் வாழ்வின் பல சிக்கலான முடிச்சுகளுக்கு தீர்வு பெரியோர் பலர் கண்டறிந்து அதை மற்றவரும் பலன் பெற சொல்லிச் சென்றுள்ளனர். அதனை ஆய்ந்து தொகுத்து அதன் வழி பல திட்டங்களை “அகம் அற்புதம்” வழி நாம் செயல்படுத்தி வருகிறோம். நம் மெம்பெர்ஷிப் தளத்தில் பதியப்பட்டு வருபவை யாவும் விலைமதிக்க முடியாத “ஒவ்வொருவரையும்” நிறை வாழ்க்கைக்கு இட்டு செல்லக் கூடிய விஷயங்கள். இதற்கு விலை வைக்க நாம் எப்போதுமே விரும்பியதில்லை. ஆனால் இவை தொழில்நுட்ப ஊடகம் வழியே வருவதால் அதற்கு ஆகும் செலவுகளுக்கும் நாம் பொறுப்பேற்க வேண்டி உள்ளது. இந்த தகவல்களையும் பதிவுகளையும் அதன் அடிப்படைக் கருத்துக்களையும் அடுத்த பத்து ஆண்டுகளுக்காவது பாதுகாக்க வேண்டியது அவசியம் ஆகிறது.

இப்பயிற்சிகளை எடுக்க ஒருவரின் பொருளாதார நிலை தடையாக இருக்கக் கூடாது. அதனாலேயே ”தனிமனித மாற்றம் முதல் உலக சமுதாய மாற்றம்” வரை வித்திடும் நம் பயிற்சிகள் அடங்கிய மெம்பெர்ஷிப்பில் சேர நாம் கட்டணங்கள் எதுவும் வைக்கவில்லை. ஆனால் நம் தொடர் செலவினங்களை எதிர்கொள்ள வாய்ப்புள்ள நல்லுள்ளங்களின் பங்களிப்பை எதிர்நோக்கி இருக்கிறோம்.

மனிதநேயம் தழைக்க வைக்கும் நமது நோக்கங்கள் பூர்த்தியாக நமது அனைத்து முன்னெடுப்புகளும் சவால்களைக் கடந்து முன்னேற வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக பொருளாதார ரீதியான சவால்கள். அனைவரும் பயன்பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் நம் நிறுவனம் எடுத்துள்ள தைரியமான முடிவின் பலன்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்றால் உங்கள் பங்களிப்பு அவசியம் தேவைப்படுகிறது. ஆனால் கட்டாயங்களில்லை. வாய்ப்பிருந்தால் உங்கள் பங்களிப்பை கீழ்காணும் படிவம் வழி செலுத்துங்கள். என்றென்றும் நன்றியுடையவராக இருப்போம். 

வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!!

இந்த உலகத்தில் நிறைய மாற வேண்டி இருக்கிறது என்று எப்போதும் எண்ணும் நாம், “நாம்” மாற வேண்டும் என்று எண்ணுவதில்லை. அப்படியே எண்ணினாலும் அது எப்படி என்று நாம் தெரிந்து கொள்வதில்லை. தெளிந்து கொள்வதில்லை.

Agam Arputham - Alpha at Omega - Contribution for this Month

ஒவ்வொரு மாதமும் அகம் அற்புதம் தனது நோக்கத்தை பூர்த்தி செய்ய பல்வேறு பொருளாதார சவால்களை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. இறை வீற்றிருக்கும் இத்தேரை ஊர் கூடி தான் இழுக்க முடியும். நமது தொழில்நுட்ப செலவுகள், திட்டச் செயல்பாட்டிற்கான செலவுகள் அனைத்தையும் சந்திக்க மாதந்தோறும் கீழ்காணும் இலக்கை எட்ட வேண்டியுள்ளது. நமது நோக்கம் புரிந்த நல்ல உள்ளங்களாலேயே இதை நகர்த்தி செல்ல முடியும். அந்த அன்புள்ளம் நீங்கள் எனில் தங்கள் பங்களிப்பை அன்புடன் எதிர்நோக்குகிறோம். 

₹0
Raised
0
Donations
₹15,000
Goal
0%
₹

கிழக்கும் மேற்கும் கலந்த தத்துவ போத செயல்முறை பயிற்சிகள்

அகம் அற்புதம் மெம்பெர்ஷிப்பில் இலவசமாக இன்றே பதிவு செய்யுங்கள்!

உங்களிடம் இருக்கும் பொருளின் இருப்பை அடிப்படையாக வையாமல் அருளின் இருப்பை கொண்டு பிரபஞ்சம் கற்பித்ததை உள்ளபடியே மற்றவரோடும் பகிர்கிறோம்.

Scroll to Top