Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest

மகிழ்ச்சி எங்கே இருக்கிறது? – Where is Happiness?

மகிழ்ச்சி எங்கே இருக்கிறது? – Where is Happiness?

ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி இருக்கிறதா? மீண்டும் தொடர்ந்து ஒரே pattern ல் வாழ்கிறீர்களா? சிலருக்கு புதிதாக செய்வதற்கு எதுவுமே இருப்பதில்லை. எல்லாமே bore ! பணம் சம்பாதிக்க அத்தனை போராட வேண்டி இருக்கிறது. எனினும், மகிழ்ச்சி மட்டும் இல்லை. சிலர், இந்த boredom ஐ தவிர்க்க புகை, மது என்று தேவை இல்லாத பழக்கங்களில் ஈடுபடுகிறார்கள். இந்த பழக்கங்கள் தற்காலிக இன்பம் தந்தாலும், மீண்டும் அதே பழைய வாழ்க்கை முறை தான் தொடர்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல் இதுவும் routine ஆக மாறிவிடுகிறது. பின்பு இதிலிருந்து விடுபட தெரியாமல் தவிக்கிறார்கள்.

இவர்கள் தங்கள், ஆற்றல், சக்தி, நேரம், பணம் போன்றவற்றை வீணடிக்கிறார்கள்.

வாழ்க்கையில் பேரார்வம் மேலோங்கி இருக்க, இயற்கையான உந்துதல், எதிர்பார்ப்பு மற்றும் உற்சாகமான உணர்வுகள் இருக்க வேண்டும். இதை எப்படி கண்டுபிடிப்பது என்று தெரியாத பொழுது தான், மனம் மேலே சொன்ன தீய வழிகளில் ஈடுபடுகிறது.

Happiness

இன்பம் (PLEASURE) என்பது வேறு; மகிழ்ச்சி (HAPPINESS) என்பது வேறு.

ஆனால், மகிழ்ச்சி என்பது உங்கள் அகத்தில் தான் உள்ளது.

உங்களால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களை ஏன் கெட்டியாக பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள்? “ஆசையே துன்பத்திற்கு காரணம்” என்று சொன்னார் புத்தர். உங்களிடம் இல்லாதவற்றைத்தானே நீங்கள் தேடிக்கொண்டு இருக்கிறீர்கள்? அதன் மீதுதான் பெரும் ஆசை வைத்திருக்கிறீர்கள்?

நான் உங்களை ஒன்று கேட்கிறேன். இந்த ஆசை இயற்கையாக தோன்றியதா? அல்லது வெளி உலகின் தாக்கத்தால், அழுத்தத்தால் உண்டானதா? அடுத்தவரை வாழ்க்கையை பார்த்து உங்களுக்கும் அதுபோன்ற வாழ்க்கை முறை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று விருப்பம். ஆனால், அது நிறைவேற முடியாத சூழ்நிலை வந்தால், அந்த விருப்பத்தை, அதன் மீதுள்ள பிடியை உங்களால் தளர்த்த முடியுமா?

முழுமையான வாழ்க்கை வாழ 5 எளிய வழிகள்

London School of Economics ல் பணிபுரியும் பேராசிரியர் Lord Richard Layard அவர்கள் மகிழ்ச்சியைக் குறித்து இவ்வாறு சொல்கிறார்:

மகிழ்ச்சி என்பது உங்கள் எதிர்பார்ப்பையும் உங்களுக்கு கிடைப்பதையும் சமன் செய்வதாகும். ஒன்று, நீங்கள் விரும்புவது எல்லாம் கிடைக்க வேண்டும். அல்லது, கிடைப்பவை எல்லாவற்றையும் விரும்ப வேண்டும்“.

நீங்கள் ஆசை என்று நினைத்துக்கொண்டிருக்கும் பலவும் உண்மையில் தற்காலிக இன்பம் தரக்கூடிய விருப்பங்களே. இவை உங்களுக்கு மகிழ்ச்சியை தராது. ஆகவே, இவற்றை வெளியேற்றி விடுங்கள். ஆசைகளும், விருப்பங்களும் காலத்திற்கு ஏற்றார் போல் மாறுகிறது. 20 வயதில், எதிர்பாலின மேல் உங்களுக்கு ஏற்படும் ஈர்ப்பு வயதாக வயதாக குறைகிறது அல்லவா?  பெரும் செல்வம் நிரந்தர மகிழ்ச்சியை கொடுக்கும் என்பதும் இதுபோலத்தான்.

Happiness, Smiling

எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பவர்களை பார்த்தால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? இவர்கள் எல்லோருக்கும் பொதுவான ஒரு குணநலம் உள்ளது. அவர்கள் தங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை புரிந்துகொண்டுள்ளனர். அது அவர்கள் இருப்பின் அவசியத்தை புரிந்து கொள்ள உதவுகிறது. தங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்கின்றனர்.

இவர்கள் ஒரு முழுமையான வாழ்க்கை வாழ்கிறார்கள். பணத்தை மட்டும் நோக்கி ஓடாமல், பணத்தை தங்கள் பிரதான தேவையாக வைத்துக்கொள்ளாமல், தங்களுக்கு பிடித்தவற்றை செய்கிறார்கள்.

இந்த பிரபஞ்ச படைப்பில் எல்லாமே தனித்துவம் கொண்டது. ஒவ்வொன்றும் அதன் இயல்பிலேயே இயங்கிக்கொண்டிருக்கிறது. மனிதன் மட்டும் இதிலிருந்து தடம் மாறி விடுகிறான். உங்கள் வாழ்வின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளுங்கள். வாழ்க்கை ஒரு பரிசு. புதையல். அது உங்களுக்குள்ளேயே புதைந்து கிடக்கிறது. அதை கண்டெடுங்கள்.

 

  1. உங்கள் பலங்கள், திறமைகள், ஆற்றல்கள் குறித்த முழுப்புரிதல் இருக்க வேண்டும்.
  2. உங்களுக்கான நோக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
  3. அதுகுறித்த இலட்சியங்கள் ஏற்படுத்திக்கொண்டு, தெளிவான திட்டத்துடன் செயலில் ஈடுபட வேண்டும்.
  4. அந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு முன்னேற்றம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் உள்ளே இருக்கும் சொர்க்கத்தில் வாழுங்கள்.

அல்லது இதே போன்ற ஒரு போராட்டமான, குழப்பமான, முரண்பாடான, பயத்துடன் கூடிய வாழ்க்கையை வாழுங்கள்.

THE CHOICE IS YOURS!

Energy, Inspiration Ideas, Planet

உங்கள் செயல்கள் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் பொழுது, அது தரும் உற்சாகத்தில் நிலைத்திருங்கள். தர்காலிகமான இன்பங்களை புறக்கணிக்கும்பொழுது, உங்கள் ஆற்றலும், சக்தியும் இது போன்ற ஆக்கபூர்வமான விஷயங்களில் செலுத்தப்படுகிறது. உங்கள் இருப்பின் உண்மையான நோக்கத்தை புரிந்துகொண்ட அதற்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும்பொழுது, அந்த வாழ்க்கை அர்த்தமுள்ளதாக, உண்மையான, மகிழ்ச்சியான வாழ்க்கையாக மாறிவிடுகிறது.

 

மாறுவோம் !

இன்றே ! இப்பொழுதே ! இக்கணமே !

 

[simple-author-box]

 

நல்ல விஷயங்களை பகிர்ந்து உதவுங்கள்!

Editorial Team

Editorial Team

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Top Posts

புத்தக புதையல்

உங்கள் தர்மத்தில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா? – “போதியின் நிழல்” உணர்த்தும் வாழ்க்கைப் பாடம்

வாழ்க்கையில் தாம் எடுத்த காரியத்தை செவ்வனே முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் ஆயிரத்தில் ஒருவராகவே இருப்பர். அதிலும் அந்த காரியம் பெரியதாக …

Read More →

நிறைவான வாழ்க்கையை உறுதி செய்யும் டாக்டர் வேய்ன் டயரின் 7 புத்தகங்கள்

வாழ்க்கையின் எந்தவொரு பிரச்சினைக்கும் ஒரு ஆன்மீக தீர்வு உண்டு என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா? ஆன்மீகம் என்றாலே பயந்து பின்வாங்குபவர்களுக்கு …

Read More →

வாழ்க்கையின் ஒரு அரிய உண்மையை விளக்கும் ‘மூங்கிலின் கதை’

“என்னப்பா வாழ்க்கை எப்படி போகிறது” என்ற கேள்விக்கு எப்போதுமே நம் பல பேரிடம் இருக்கும் பதில், “அது எங்கேப்பா.. அப்படியே …

Read More →

எனது கதை

வாழ்க்கையில் லட்சியத்துடன் இரு, வெற்றியை நோக்கி ஓடு என்ற அறிவுரைகளை கேட்டு வளர்பவர்கள் தான் நாம். சமூகம் சொல்லும் விதிகளை, …

Read More →

உன் கையில்தான் மகனே…

ஒரு சிறுவன் தன் தாயிடம் சென்று “அம்மா யாரம்மா அந்த முதியவர், அந்த மலை மேல் உட்கார்ந்து கொண்டு தவம் …

Read More →

பொன்விதி தெரியுமா உங்களுக்கு?

உலகில் எல்லாவற்றிலும் எல்லாவர்க்கும் நன்மை பயக்க எல்லா மதங்களும் பின்வரும் ஒரு விஷயத்தை போதிக்கின்றன. இதனை நாம் “பொன் விதி” …

Read More →

மனம் விரும்பியதை நிகழ்த்திக் காட்டுங்கள் புத்தகத்தை வாங்கி பயன்பெறுங்கள்!!

Scroll to Top