இந்த மாதத்திற்கான சுயப்பிரகடனம் : வாழ்வில் நமது தனித்துவமும் நோக்கமும் ஈடேற பயன்படுத்தப் பெறும் சுயப்பிரகடனமாகும். இங்கு பயன்படுத்தப்படிருக்கும் வார்த்தைகள் முறையே எதிர்மறையை போக்கி நேர்மறை எண்ணத்தை வளர்ப்பனவாகும். இதனை ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்றார் போல் மாற்றி, குறிப்பாக அவரவர் தங்கள் நம்பிக்கைக்கு ஏற்றார் போல் இறை பேராற்றலுகு பதில் இறைவன், ஆண்டவன் எனும் பதங்களை உபயோகிக்கலாம் – காலையும் மாலையும் சொல்லி வருவது ஆழ்மனதிற்கு நல்ல பதிவுகளைத் தரும். (கைப்பேசியில் தங்கள் சொந்த குரலில் பதிவு செய்து கேட்டு வருதல் இன்னும் நல்லது)